ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் புளியமர பஸ்ஸ்டாப் அருகில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. இந்த வழியாக தினந்தோறும் ஏராளமான பள்ளி பஸ்கள், அரசு-தனியார் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் அதிக அளவில் பயணிக்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் ஒருவித தயக்கம் அடைகின்றனர். எனவே மின்துறை அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்வயர்களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.