மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2023-06-25 14:10 GMT

அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் ராமகிருஷ்ணா நகரில் நடுரோட்டில் மின் கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மின்கம்பத்தின் கீழ்பகுதி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பலத்த காற்றடித்தால் சாய்ந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்