திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட் அருகே ஈகைடவுன் பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதேபோல் ஏராளமான மின்கம்பங்களும் இதே நிலையில் தான் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதமக்கள், சமூக ஆர்வலர்கள் கேரிக்கை விடுத்துள்னனர்.