நாகை மாவட்டம் வடுகச்சேரியில் கோட்டூர் வாய்க்கால் அருகே வயல்வெளியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன்காரணமாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.