புதுக்கோட்டை மாவட்டம், கணபதி நகரில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் தெருவிளக்கு சுவிட் பாதுகாப்பு அற்ற முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.