சென்னை, திரு.வி.க நகர் பகுதி அருந்ததி நகரில், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.