திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, ஏழுமலை நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகளில் விரிசல் ஏற்பட்டு முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. பள்ளி மாணவர்கள், பெண்கள், வயதானவர்கள் அப்பகுதி வழியே தினம் தோறும் பயணம் செய்கிறார்கள். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.