கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள மரவாபாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையின் அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு மின் கம்பம் நடப்பட்டுள்ளது. அந்த கம்பத்தின் வழியாக மின்கம்பிகள் பொருத்தப்பட்டு உயர் மின்னழுத்த மின்சாரம் 24 மணி நேரமும் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்கம்பம் சற்று கீழே சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் தார் சாலையில் விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மிகவும் சாய்ந்த நிலையில் உள்ள இரும்பு மின் கம்பத்தை மாற்றி விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.