கருங்கல் பேரூராட்சிக்கு மாங்கன்றுவிளை இந்திராநகர் உள்ளது. இங்குள்ள சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முடிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், மாங்கன்றுவிளை.