ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம்

Update: 2022-07-23 12:42 GMT
விழுப்புரம் அருகே தோகைப்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகில் மின் கம்பம் ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மின் கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே எந்த நேரத்திலும் அந்த மின் கம்பம் சாய்ந்து விழுந்தால் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் விழித்துக்கொண்டு அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் நடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?
..........

மேலும் செய்திகள்