திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து, மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செல்லும் சாலையோரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றன. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?