கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடியில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.