தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழியில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள மின்கம்பத்தை செடி,கொடிகள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக செடி,கொடிகளின் கம்பமாக மின்கம்பம் காட்சி அளிக்கிறது. இவற்றால் மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கு சரிவர எரிவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.