சேதம் அடைந்த மின்கம்பம்

Update: 2023-05-31 09:50 GMT

குன்னூர் ஹைதர் கார்டன் பகுதியில் மின்வாரியம் சார்பில் 2 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு மின்கம்பம், போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டு உள்ளது. குறுகலான பகுதியில் சாக்கடை கால்வாய் மீது அமைக்கப்பட்டு உள்ள அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும், சாய்ந்து விழும் நிலை உள்ளது. எனவே அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்