அந்தியூர் அருகே பிரம்மதேசத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பஸ் ஏறி வருகிறார்கள். இரவு நேரத்தில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே பிரம்மதேசம் பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து அர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.