காட்டுமன்னாா்கோவில் தாலுகா தெற்குமாங்குடி, கத்திரிமேடு, அத்திப்பட்டு, ஆலம்பாடி போன்ற பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும், நிலையில் இதுபோல ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.