வளவனூர் பேரூராட்சி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தபால் நிலையம் அருகே மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.