தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-05-24 10:05 GMT
  • whatsapp icon

கூடலூர் அருகே தேவாலா பஜார் பகுதியில் இருந்து திருவள்ளுவர் நகருக்கு செல்லும் வழியில் உள்ள தாழ்வான பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்ைல. வனவிலங்குகள் தொல்லை உள்ள பகுதியில் தெருவிளக்கு இல்லாமல் கிடப்பதால், இரவில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சமாக உள்ளது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்