இருளில் மூழ்கிய சாலை

Update: 2023-05-21 17:33 GMT

தர்மபுரி- சேலம் சாலையில் அதிக வாகன போக்குவரத்து கொண்ட பகுதிகளில் ஒன்றாக இலக்கியம்பட்டி உள்ளது. இந்த சாலையின் மைய தடுப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் அவ்வப்போது எரிவதில்லை. இதனால் இரவில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த மின்விளக்குகள் முழுமையாக எரிவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்