ஆபத்தான மின்கம்பம்
கருங்கலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சாலையில் கருமாவிளை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுனில்குமார், கருங்கல்.
----------