செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் செய்யூர் வெள்ளிமேடு பகுதியில் தனியார் மகளிர் மேல்நிலை பள்ளியின் நுழைவுவாயில் அருகே இருக்கும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்த் வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக சாய்ந்த மின்கம்பம் உடனடியாக சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.