விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரிலிருந்து அந்திலி கிராமத்திற்கு செல்லும் சாலையில் தெருமின்விளக்கு இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் தெருமின்விளக்கு அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.