பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காமில், பரங்கிப்பேட்டை.