செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் வெள்ளிமேடு பகுதியில் தனியார் மகளிர் மேல்நிலை பள்ளியின் நுழைவுவாயில் அருகே இருக்கும் மின்கம்பம் சாய்ந்த நிலையிலும், அதன் வயர்கள் மரக் கிளைகளை உரசிக்கொண்டும் ஆபத்தாக காட்சி தருகிறது. இந்த மின்கம்பத்தை விரைவில் சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.