கடலூர் மஞ்சக்குப்பம் நேரு நகர் சாலையில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆகவே எரியாத தெரு மின் விளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.