திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா கொரடாச்சேரி பேரூராட்சி 4-வது வார்டில் வெள்ளமதுகு கிராமத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. குறிப்பாக மின்கம்பிகள் வீடுகள், குடியிருப்புகளுக்கு முன்பு கைக்கு எட்டும் தூரத்தில் செல்கின்றன. இதனால் வீடுகளில் உள்ளவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். கனரக வாகனங்களும் சாலையில் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?