ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தீயணைப்பு நிலையம் மற்றும் வனத்துறை அலுவலகம் செல்லும் சாலையின் இடது புறத்தில் உள்ள மின் பெட்டி திறந்த நிலையில் கிடக்கிறது. கோடை சீசன் தொடங்கியுள்ளதால், குழந்தைகளுடன் அந்த வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவித சம்பவம் ஏதேனும் ஏற்படும் முன்பு அந்த மின் பெட்டிக்கு மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.