விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமம் போத்தியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எந்நேரமும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதை சாிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.