சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் 10-வது தெருவில் பழுதடைந்த மின்சார கேபிள் சமீபத்தில் சரிசெய்யப்பட்டது. ஆனால் முன்பு இருந்த உயர் அழுத்த மின்சார கேபிளுக்கு பதிலாக வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சர்வீஸ் கேபிள் தற்போது பெருத்தப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இந்த பகுதியில் மின்சாரம் தடை பெற்று வருகிறது. மேலும் மின்சார வயர்கள் சாலையில் மேற்பகுதியில் ஆபத்தான முறையில் செல்கிறது. எனவே, மின்சார வாரியம் இதை விரைவில் சரி செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.