பழனி பஸ்நிலைய பூங்கா பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. எனவே இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதேபோல் பஸ்நிலையத்தில் இருந்து திருஆவினன்குடி கோவில் செல்லும் குளத்துரோட்டிலும் அவ்வப்போது மின்விளக்கு எரிவதில்லை. எனவே பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.