நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில், மதுரை பிரதான சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் மக்கள் நடமாடும் நிலை உள்ளது. அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடுவார்களா?