தர்மபுரி நகரில் இருந்து ஒட்டப்பட்டி வரை சாலையின் மைய தடுப்பு பகுதியில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் தர்மபுரி 4 ரோடு முதல் பாரதிபுரம் வரை உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் அவ்வப்போது எரிவதில்லை. இதனால் அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த சாலை பகுதி இருளில் மூழ்குகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பகுதியில் தினமும் இரவு நேரங்களில் சாலையின் மைய தடுப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.