தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-04-19 12:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, செங்கீரை பஞ்சாயத்தை சேர்ந்த மேனாம்பட்டியில் இருந்து பெருங்குடி பஞ்சாயத்தை சேர்ந்த இன்னாசியார்புரம் மற்றும் தெற்கு நல்லிப்பட்டி வரை செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் வரை மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்