புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மலைக்குடிப்பட்டி செட்டியார் நடுத்தெரு குடியிருப்பு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து அதன் மேல் பகுதி துண்டான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.