சென்னை முகப்பேர் மேற்கு 4-வது பிளாக் அருகே உள்ள மின்கம்பம் ஒன்று வீட்டின் மேல் சாய்ந்த நிலையில் உள்ளது. வீட்டின் பால்கனியில் ஒட்டியவாறு நிற்கும் மின்கம்பத்தால் விபரீதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் மின்வயர்கள் சிக்கலாக வீட்டின் சுவரையொட்டி செல்கிறது. மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சரி செய்யவோ அல்லது மாற்றி அமைக்கவோ வேண்டும்.