புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கல்குடி கொடியன்காட்டுப்பட்டி செல்லும் தார் சாலை வழியில் வயல் பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. வயல்வெளியில் விவசாய பணி நடக்கும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.