தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-04-12 12:25 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் தார்சாலை நெடுகிலும், கிராம சாலைகள் வழியாகவும், விவசாய தோட்டங்கள் வழியாகவும் மின்கம்பி மூலம் மின்சாரம் செல்கிறது. மின் கம்பிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக குறுக்கு, நெடுக்காக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. சில நேரங்களில் கம்பிகள் அறுந்து விவசாய தோட்டங்களிலும், தார் சாலைகளிலும் விழுந்து விடுகிறது. இவ்வாறு விழுந்து கிடப்பதால் அந்த வழியாக செல்லுவர்களுக்கு தெரியாததால் மின்சாரம் பயந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் விவசாய தோட்டங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகளுக்கு பதிலாக மின் கேபிள்கள் அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்கப்படுகிறது. மின்சாரமும் பாதுகாப்பாக செல்கிறது. அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்சார கம்பிகளை அகற்றிவிட்டு மின்சார கேபிள் ஒயர்களை பொருத்தி விபத்துக்கள் ஏற்படாதவாறு உயர் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்