பண்ருட்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளது. இதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தொிகிறது. மேலும் மின்கம்பத்தில் ஆங்காங்கே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?