பழனி கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்போது வெயில் காலம் என்பதால் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கிராமப் பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.