திருவள்ளூர் மாவட்டம் சோத்துப்பெரும்பேடு கிராமத்தில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக மின்வாரிய அதிகாரிகளால் புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.