கோவில்பட்டி மாதா கோவில் ரோடு முச்சந்தி பகுதியில் உள்ள மின்கம்பமானது, காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதிக்கு வாசகர் பாலமுருகன் அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.