தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் இருந்து திவான்நகர் சாலைக்கு திரும்பும் இடத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மையப்பகுதிக்கு அருகே உள்ளது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு சாலையோரத்தில் வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?