திருவாரூர் பனகல் சாலையின் நடுவே சாலையின் நடுவே இரும்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அறியாமல் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் தடுப்புகம்பிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இரும்புதடுப்புகம்பிகள் மீது ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள், மற்றும் சாலையில் தேவையான இடங்களில் ஒளிபிரதிபலிப்பான் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?