எரியாத மின்விளக்கு

Update: 2022-07-21 11:35 GMT

ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மனநிலை பிரிவு வழியாக நெஞ்சக நோய்க்கு செல்லும் சாலையில் இருபுறமும் அமைந்துள்ள மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் நோயாளிகளை பார்க்க வருகிறவர்களும், நோயாளிகளும் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சி.முத்துக்குமார், ஆடராவிளை.

மேலும் செய்திகள்