செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வி.கே.நகரில் உள்ள சுரங்கப்பாதையில் இதுவரை மின்விளக்கு வசதி என்பதே இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் இந்த சுரங்கப்பாதையை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகிறார்கள். பெண்கள், பள்ளி மாணவர்கள் அடிக்கடி இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகிறார்கள்.