ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-03-19 15:47 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பெரியகடைத்தெரு மேல்பாகம் என்ற இடத்தில் இரும்பிலான மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து ஓட்டை விழுந்து உள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்