ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-20 17:22 GMT

கரூர் மாவட்டம் புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து கரைப்பாளையம் செல்லும் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், தரமற்ற மின் கம்பம் நடப்பட்டதாலும் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்