மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-12 10:20 GMT

தஞ்சை மனோஜிப்பட்டி முத்துசாமி நகரில் முல்லை நகர், வனதுர்க்கா நகர், செல்லும் மெயின் சாலையில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி உள்ளது. இதனால் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்