பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளை பெரிய தெருவில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுவிச்சு பெட்டி தாழ்வாக காணப்படுவதுடன் சேதமடைந்து திறந்தே கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேமடைந்த சுவிச்சு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டிய உயரமான இடத்தல் பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேக் மைதீன், திட்டுவிளை.