சேதம் அடைந்த மின்கம்பம்

Update: 2022-07-20 14:28 GMT

திண்டுக்கல்லை அடுத்த கோவிலூரில் இருந்து கரட்டூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து காணப்படுகிறது. கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. அதற்குள் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்